இலங்கையில் வரிசையில் காத்திருக்கும் மக்கள் -தீர்வு கிடைக்குமா?

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில் வரிசையில் காத்திருக்கும் மக்கள் -தீர்வு கிடைக்குமா?

நாட்டில் அத்திவாசிய பொருட்களின் விலையேற்றம் ,மற்றும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் வரிசை யுகத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தற்போது வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

நாங்கள் காலை முதல் நின்று கொண்டு இருக்கின்றோம்.சுமார் 100 க்கும் அதிகமானோர் மண்ணெண்ணை பெற்றோல் வாங்க வரிசையில் நிற்க வேண்டி உள்ளது.

வண்டி ஓட்டுவதே வாழ்வாதாரமாக கொண்ட நாம் என்ன செய்வது.

இங்கு நிற்கும் கூட்டத்தை பார்த்தால் மண்ணெண்ணெய் இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. இந் நிலை எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

நாங்கள் கோட்டாபயவிற்குதான் நாம் வாக்குகளை வழங்கினோம். ஆனால் அவர் நம் நாட்டை நமக்கு இல்லாதது செய்து விட்டார்.

குழந்தைகளுக்கு பால் இல்லை, அரசி இல்லை நாங்கள் எதை உண்பது.

பெற்றோல் பிரச்சனை முச்சக்கர வண்டி செலுத்துபவர்கள் நிலை என்ன மனசாட்சி அற்ற அரசாங்கமாக உள்ளது இவ் அரசாங்கம்.

அன்றாட தொழில் ஈடுபடுகின்றவர்ளின் கதி என்ன? இதற்கு தீர்வை தாருங்கள்.என கவலையுடன் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4