15 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

#SriLanka
15 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஏனைய புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து இலங்கை கடற்பரப்பிலும் சர்வதேச கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, ​​1,268 கிலோகிராம் அதிகமான ஹெரோயினுடன் வெளிநாட்டவர்கள் உட்பட 141 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 7,095 கிலோகிராம் கேரள கஞ்சா, 158 கிலோகிராம் ஐஸ் மற்றும் 88 கிலோகிராம் ஹஷிஸ் உடன் 327 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்ற இலங்கைச்செய்திகளுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4