சுசிலின் பதவி பறிப்புக்கு எதிராக மைத்திரி போர்க்கொடி!

Prasu
4 years ago
சுசிலின் பதவி பறிப்புக்கு எதிராக மைத்திரி போர்க்கொடி!

"இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவைப் பதவி நீக்குவதால் தீர்வு கிட்டாது."

- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசை விமர்சித்துப் பேசிய 24 மணித்தியாலங்களின் பின்னர் சுசிலின் அமைச்சுப் பதவி ஜனாதிபதியால் நீக்கப்பட்டுள்ளது.

விமர்சனம் செய்ததற்காகச் சுசில் பிரேமஜயந்தவை நீக்கியவர்கள், அரசைத் தொடர்ந்து அதிகமாக விமர்சித்து வரும் நிமல் லன்சாவுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

தவறுகளைத் திருத்திக் கொண்டு, மக்களின் பிரச்சினையைத் தீர்த்தால் அரசால் முன்னோக்கிச் செல்ல முடியும்.

நாடு முழுவதும் வீடுகளில் இடம்பெறும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களுக்கு எதிராக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது" - என்றார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4