இந்த வருட இறுதிக்குள் வெடித்துச் சிதறும் அரசு! - அடித்துக் கூறுகின்றது ஐ.தே.க.

Prasu
4 years ago
இந்த வருட இறுதிக்குள் வெடித்துச் சிதறும் அரசு! - அடித்துக் கூறுகின்றது ஐ.தே.க.

"2022ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் அரசு வெடித்துச் சிதறிவிடும் என்பது மிகத் தெளிவாகப் புலப்படுகின்றது."

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பட்டாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசு வெடித்துச் சிதறும்போது மக்களைப் பாதுகாக்கக் கூடிய ஒரே தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி பல சவால்களை எதிர்கொண்டது. எனினும், கட்சியை வலுப்படுத்தப் பல தரப்பினர் தற்போது உதவி வருகின்றனர்" - என்றார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4