05.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
05.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: உங்களது முயற்சி காரணமாக கனவு ஒன்று நனவாகும்.
பரணி: சகபணியாளர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து உதவுவர்.
கார்த்திகை 1: பல நாளாக இழந்திருந்த நிம்மதி மீளும். பயம் நீங்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: புதிய முதலீடுகளை கவனமாக செய்வீர்கள்.
ரோகிணி: சொத்து வாங்குவது பற்றி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்
மிருகசீரிடம் 1,2: பயம் தீரும். பணியில் அலட்சியம் வேண்டாம்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: நண்பரிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
திருவாதிரை: திட்டமிட்ட விஷயம் ஒன்றில் வெற்றி பெறுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: எதையும் இரு முறை யோசித்துச் செய்வது நல்லது.

கடகம்: 
புனர்பூசம் 4: அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.
பூசம்: குழந்தைகள் பற்றிய பயமும் கவலையும் குறைய ஆரம்பிக்கும்.
ஆயில்யம்: அவசியமின்றித் தாழ்வு மனப்பான்மை வருவதை தவிருங்கள்.

சிம்மம்: 
மகம்: முயற்சியில் வெற்றி உண்டு. மனதில் மகிழ்ச்சி நிலவும்.
பூரம்: பிள்ளைகளின் திருமணம் குறித்து நல்ல முடிவு வரும்.
உத்திரம் 1: தந்தையின் தேவையை நிறைவேற்றி அவரது ஆசியை பெறுவீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உறவினரால் முன்பு ஏற்பட்டிருந்த தொல்லை நீங்கும்.
அஸ்தம்: நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஒன்றை அடைவீர்கள்.
சித்திரை 1,2: மன நிறைவு ஏற்படும். புதிய ஒப்பந்தம் ஒன்று போடுவீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: உறவினரால் ஆதாயம் உண்டு. செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.
சுவாதி: நண்பர்களிடம் கேட்ட பண உதவி கிடைக்கும்.
விசாகம் 1,2,3: முயற்சி ஒன்றிற்கு உறவினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டு வாங்குவீர்கள்.
அனுஷம்: உடல் ஆரோக்கியம் சீராகி நிம்மதி தரும். பணக்கவலை தீரும்.
கேட்டை: உங்களது முயற்சியால் சிறு சிறு பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

தனுசு: 
மூலம்: சகோதரர் உங்களுக்கு உதவ முன்வருவார். தடைகள் நீங்கும்.
பூராடம்: உங்களுடன் இணைந்து செயல்பட சகபணியாளர்கள் முன்வருவார்கள்.
உத்திராடம் 1: உங்களது முயற்சியால் சிறு சிறு பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: சொத்து வாங்குவது பற்றி இருந்த கவலைகள் நீங்கும்.
திருவோணம்: துணிந்து சில முடிவுகளை எடுத்து வளத்தைக் காண்பீர்கள்.
அவிட்டம் 1,2: நல்ல மாற்றம் வரும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: நெருங்கிய உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.
சதயம்: உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினரின் ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: குழந்தைகளின் வாழ்வில் வளம் ஏற்பட்டு மகிழ்ச்சி அளிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: பணியிட வளர்ச்சிக்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி தரும்
உத்திரட்டாதி: நீண்ட நாளாக நீங்கள் எதிர்பார்த்த சுபச்செலவு வரும்.
ரேவதி: பணியாளர்கள் கடமைகளை கருத்துடன் செய்தால் நன்மை வரும்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்