உள்ளூர் வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை!

Mayoorikka
4 years ago
உள்ளூர் வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை!

எதிர்காலத்தில் மாகாண சபைகளின் கீழுள்ள பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.

நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதார பணியாளர்களை கருத்திற்கொண்டு மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைக்கு சொந்தமான நிறுவனங்களை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரும்போது பல விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போதுள்ள சுகாதார அமைப்பை வலுப்படுத்துவது நாட்டின் எதிர்காலத்திற்கு சாதகமாக அமையும் என அமைச்சர் கூறினார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4