குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட பஸ் உடைப்பு: பொலிஸார் எடுத்த நடவடிக்கை

Mayoorikka
4 years ago
குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட பஸ் உடைப்பு: பொலிஸார் எடுத்த நடவடிக்கை

குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பஸ் ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கராஜ மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4