இலங்கை வந்த சொகுசு விமானங்கள் தொடர்பில் நீடிக்கும் மர்மம்!

#SriLanka #Flight
Nila
4 years ago
 இலங்கை வந்த சொகுசு விமானங்கள் தொடர்பில்  நீடிக்கும் மர்மம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வார காலமாக 2 அதிசொகுசு ஜெட் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜெட் விமானங்களில் ஒன்று, சுவிஸர்லாந்திலிருந்து மாலைதீவு வழியாக இலங்கையை வந்தடைந்துள்ளது.


மற்றைய ஜெட் விமானம் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நேரடியாக வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு அதிசொகுசு ஜெட் விமானங்களும், கடந்த 28ம் திகதியே நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த ஜெட் விமானத்தில் வருகைத் தந்த நபர்கள் தொடர்பிலான தகவல்களை பாதுகாப்பு காரணங்களினால் வெளியிட முடியாது என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளதாக நியூஸ் பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4