அரிசி விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

Mayoorikka
4 years ago
அரிசி விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

சந்தையில் அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபாய் வரையிலும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார்.

வழமையாக ஜனவரி மாதத்தில், பெரும்போக அரிசி சந்தைக்கு கிடைக்கப்பெறும். எனினும், உரப் பிரச்சினை காரணமாக இந்த முறை போதியளவான அரிசி சந்தைக்கு கிடைக்கப்பெறவில்லை என முதித்த பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4