ஒரு கிலோ நெல்  75 ருபாவுக்கு கொள்வனவு செய்யத்தீர்மானம் 

#SriLanka
Prathees
4 years ago
ஒரு கிலோ நெல்  75 ருபாவுக்கு கொள்வனவு செய்யத்தீர்மானம் 

நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த வருடம் மகா பருவத்தில் கிலோ ஒன்றுக்கு 75 ருபா என்ற விலையில் நெல்லை கொள்வனவு செய்யும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த மகா பருவத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு ருபாவுக்கு 25 மேலதிகமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, விவசாய காப்புறுதிச் சபையும் பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பயிர் சேதத்திற்காக 5,000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி இந்த ஆண்டும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பல இலங்கை செய்திகளை பார்வையிட இதில் கிளிக் செய்யுங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4