கொவிட் தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில்

Prabha Praneetha
4 years ago
கொவிட் தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில்

பொது இடங்களுக்கு செல்வோர் கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பான சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.

இது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாவது தடுப்பூசியை செலுத்திய பின்னர், முதல் 3 மாதங்களில் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த தடுப்பூசி செலுத்தல் மூலம் பல்வேறுப்பட்ட நோய் அறிகுறிகள் ஏற்படுவதாக வெளியான தகவல் இதுவரை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4