90 இலட்சம் ரூபா பணத்துடன் ஒருவர் கைது

Prabha Praneetha
4 years ago
90 இலட்சம் ரூபா பணத்துடன் ஒருவர் கைது

தெலிகட-லும்பினி, கினிமெல்ல கஹா மேற்கு, கோனபீனுவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக கருதப்படும் கைத்துப்பாக்கி மற்றும் பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் ரவைகள், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 9 மில்லியன் ரூபா பணம், செயற்கைக்கோள் ரக தொலைபேசி மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் என்பன அவரிடம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கோனாபினுவல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4