வெண்டைக்காய் சாம்பார் வைக்கும் முறை.
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய் - 10 (சற்று நீள நீளமாக வெட்டவும்)
- துவரம் பருப்பு - 1 கப்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
- புளி - 1 நெல்லிக்காய் அளவு
- வெல்லம் - 2 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- தேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
- முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
- நறுக்கிய வெண்டைக்காயை போட்டு, அதில் உள்ள பிசுபிசுப்பு நீங்கி, வெண்டைக்காய் ஓரளவு சுருங்கும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் புளிச்சாறு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- வெண்டைக்காய் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பு, உப்பு, வெல்லம் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
- அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
- மற்றொரு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் ஊற்றி இறக்கினால், சுவையான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் தயார்.
குறிப்பு:
உங்களுக்கு பச்சை மிளகாய் சேர்க்க பிடிக்கா விட்டால், அதற்கு பதிலாக சாம்பார் பவுடரை 2 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.
மேலும் பல சமையல் குறிப்புக்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.