எரிவாயு பிரச்சினையால் சூழலுக்கு பாதிப்பு

Prabha Praneetha
4 years ago
எரிவாயு பிரச்சினையால் சூழலுக்கு பாதிப்பு

எரிவாயு பிரச்சினை இன்னும் பல மாதங்களுக்கு நீடித்தால், எரிவாயுவுக்கு பதிலாக விறகுகளை பயன்படுத்துவோரின் சதவீதம் அதிகரித்து வரும் நிலை காணப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு, சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு வெடிப்பு போன்ற காரணங்களால் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் விறகு பயன்பாடு அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், விறகுகளை பெறுவதற்காக மக்கள் அருகிலுள்ள காடுகளுக்குள் நுழைவதால், காடுகள் அழிவடையும் நிலை இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அதனால் ஏற்படும் நடவடிக்கைகளின் பாதகமான விளைவுகளை எதிர்காலத்தில் காணமுடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4