முடிந்தால் மாகாண சபை தேர்தலை நடத்துக – எதிர்க் கட்சி அரசுக்கு சவால்

Prabha Praneetha
4 years ago
முடிந்தால் மாகாண சபை தேர்தலை நடத்துக – எதிர்க் கட்சி அரசுக்கு சவால்

முடிந்தால் மாகாண சபை தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக , ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார நேற்று தெரிவித்தாா்.

மாகாண சபை தேர்தலை வெற்றிக்கொண்டதும் எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை அமைத்து வெற்றி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டாா்.

இலஞ்ச, ஊழல் அற்ற நேர்மையான மக்கள்மீது அக்கரையுள்ள குழுவொன்று சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியில் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் குறிபிட்டாா்.

கொழும்பிலுள்ள எதிர்க் கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டாா்.

தொழிற்சங்கம் ஒன்றிணைந்த அமைப்பை பலப்படுத்திக்கொண்டு எதிர்வரும் தேர்தல் களத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
 


மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4