காணாமல் போன இரண்டு சிறுவர்கள் 44 நாட்களின் பின்னர் கண்டுபிடிப்பு

#Police
Prathees
4 years ago
காணாமல் போன இரண்டு சிறுவர்கள் 44 நாட்களின் பின்னர்  கண்டுபிடிப்பு

காணாமல் போன கொட்டதெனியவ இரண்டு சிறுவர்கள் 44 நாட்களின் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மர்மமான முறையில் காணாமல் போன இரண்டு சிறுவர்கள் இன்று கொடதெனியாவ, வத்தேமுல்ல மற்றும் பாண்டுராகொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

44 நாட்களின் பின்னர் மீரிகமவில் உள்ள கடையொன்றுக்கு வந்து கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

உணவு வாங்குவதற்காக கடைக்கு வந்த போது கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து இரண்டு குழந்தைகளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகம பொலிசார் புகைப்படங்களை எடுத்து கொடதெனியாவ பொலிஸாருடன் பொருத்தி அவர்கள் காணாமல் போனவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

44 நாட்களாக கொட்டதெனியவில் காணாமல் போன சிறுவர்கள் எங்கு இருந்தனர் என்பது இதுவரை ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

குழந்தைகளின் பெற்றோர் மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் குழந்தைகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக  தெரியவருகின்றது.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4