இலங்கையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து !

#SriLanka #Jaffna
Nila
4 years ago
இலங்கையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து !

யாழ்ப்பாண நகர எல்லைக்குள் Anopheles Defense எனப்படும் மலேரியா நுளம்பு இனம் இனங் காணப்பட்டுள்ளது.

 
இது ஆபத்தான நிலை எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 
 
யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
தென்னாபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பலருக்கு மலேரியா தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. 
 
இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார். 
 
யாழ்ப்பாண நகர எல்லைக்குள் இந்த வகை நுளம்பு இனம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதனால் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4