இலங்கையர் ஒருவர் தமிழகத்தில் கைது!

Mayoorikka
4 years ago
இலங்கையர் ஒருவர் தமிழகத்தில் கைது!

தனுஷ்கோடி கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று இரவு மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு சென்று தங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் விசா முடிந்ததால் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வருவதற்கு தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமாக கடற்கரையில் நின்ற குறித்த நபர் குறித்து அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மெரைன் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மெரைன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த சமிந்தன் (வயது-24) என தெரிய வந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4