தெமட்டகொட சமிந்த உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 

#Court Order
Prathees
4 years ago
தெமட்டகொட சமிந்த உள்ளிட்ட நால்வருக்கு எதிராக  குற்றப்பத்திரிகை தாக்கல் 

2014ஆம் ஆண்டு நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் தெமட்டகொட சமிந்த உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (07) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் குற்றச்சாட்டுகள் கையளிக்கப்பட்டன.

இதையடுத்து வழக்கை ஜனவரி 31ம்  திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி பொரளை பிரதேசத்தில் எச். துமிந்த என்றழைக்கப்படும் சானக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதாள உலகக் குழுத் தலைவர் குற்றச்சாட்டில் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்த என்ற சமிந்த ரவி ஜயநாத் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தெமட்டகொட சமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4