இன்றைய 10 விடுகதைகள்... பாகம் - 01

Reha
2 years ago
இன்றைய 10 விடுகதைகள்... பாகம் - 01

விடுகதைகளும் அதன் விடைகளும்.

1. உள்ளே இருந்தால் ஓடித்திரியும். வெளியே வந்தால் விரைவில் மடியும். அது என்ன?

2. உருவம் இல்லாதவன் சொன்னதை திரும்ப சொல்லுவான். அவன் யார் ?

3. இரவல் கிடைக்காதது. இரவில் கிடைப்பது. அது என்ன ?

4. இணை பிரியமாட்டார்கள், நண்பர்கள் அல்ல. ஒன்று சேர மாட்டார்கள், பகைவர்கள் அல்ல. அவர்கள் யார் ?

5. நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன ?

6. ஐந்து அடுக்கு நன்கு இடுக்கு. அது என்ன ?

7. நான்கு மூளை கிணறு நாக ரத்தினக்கிணறு. எட்டி பார்த்தால் சொட்டு தண்ணீர் இல்லை. அது என்ன ?

8. நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழவைப்பேன். நான் யார் ?

9. நடலாம் பிடுங்க முடியாது. அது என்ன ?

10. நடக்க தெரியாதவன் நட்டுவனுக்கு வழி காட்டுகிறான். அவன் யார் ?

விடைகள்.
1. மீன் 2. எதிரொலி 3. தூக்கம் 4. ரயில் தண்டவாளம் 5. விரல்கள்

6. பூனை 7. அச்சு வெல்லம் 8. வெங்காயம் 9. பச்சை குத்துதல் 10. கை காட்டி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!