மாலைதீவு கடற்கரையில் தத்தளித்த 5 இலங்கை மீனவர்கள் மீட்பு

#Fisherman #Maldives
Prathees
4 years ago
மாலைதீவு கடற்கரையில் தத்தளித்த 5 இலங்கை மீனவர்கள் மீட்பு

மாலைதீவு கடற்பரப்பில் தத்தளித்த 5 இலங்கை மீனவர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்

பேருவளை கடற்பரப்பில் இருந்து 06 மீனவர்கள் அடங்கிய இழுவை படகு மீன்பிடிப்பதற்காக புறப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி முதல் குறித்த மீன்பிடி படகு நிலத்துடன் தொடர்பு கொள்ளவில்லை என கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இழுவை படகில் இருந்து 5 மீனவர்கள் நேற்று (07) காலை மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

படகில் இருந்த மீனவர் ஒருவரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட மீனவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4