மிளகு இஞ்சி சேர்த்த கோழியிறைச்சிக் கறி சமைப்பது எப்படி?
#Cooking
#Pepper
#Chicken
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்:
- எலும்புள்ள சிக்கன் துண்டுகள்
- அரிந்த வெங்காயம்
- மிளகு
- இஞ்சி விழுது
- கொத்தமல்லி இழை நறுக்கியது
- பெருஞ்சீரகம் விதைகள்
- உப்பு
- காடி / வினிகர்
- இலவங்கப்பட்டை குச்சி
- சோயா சாஸ்
- எண்ணெய்
எப்படி செய்வது:
- எண்ணெயில் இலவங்கப்பட்டை குச்சி மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை சேர்த்து நன்கு வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்க்கவும்.
- சிறிது நேரம் கழித்து, இஞ்சி விழுது சேர்க்கவும். அடுத்து கோழி மற்றும் உப்பு சேர்க்கவும். இவை எல்லா வற்றையும் நன்கு வதக்கவும். இதை 15 நிமிடங்கள் சமைக்கவும்.
- வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்க்கவும். மிதமான தீயில் தண்ணீரை நன்கு சுண்ட விடவும்.
- அடுப்பை அணைக்கும் முன், கொத்தமல்லி இலைகள் மற்றும் மிளகு சேர்த்து அணைக்கவும். சூடாக இதை சோற்றுடன் பரிமாறவும்.
மேலும் சமையல் குறிப்புகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.