20 அடி பள்ளத்தில் விழுந்த பயணிகள் பேருந்து

#Accident #Bus
Prathees
4 years ago
20 அடி பள்ளத்தில் விழுந்த பயணிகள் பேருந்து

ஹட்டன் - சஞ்சிமலை பிரதான வீதியின் அன்பீல்ட் பகுதியில் பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

இந்த விபத்து இன்று (08) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் - சஞ்சிமலை பிரதான வீதியில் பயணிக்கும் தனியார் பஸ்ஸே விபத்துக்குள்ளானது.

சாரதி  பஸ்ஸை ஸ்டார்ட் செய்து, தனது பயணத்தைத் தொடங்க முன்னோக்கி ஓட்டும்போது பஸ் வீதியை விட்டு வேகமாகச் சென்று, வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4