காட்டு யானையை சுட்டுக் கொன்ற நபர் கைது

#Arrest
Prathees
4 years ago
காட்டு யானையை சுட்டுக் கொன்ற நபர் கைது

கிரிந்தஇ சித்துல்பவ்வ, யோதகண்டிய வீதியில் கிராவல் வீதிக்கு அருகில் யானையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கிரிந்த, கொரகஹவுல்பாத பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து T56 துப்பாக்கி, 07 தோட்டாக்கள் மற்றும் காட்டு யானையைக் கொல்லப் பயன்படுத்திய மகசீன் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர்.

சந்தேக நபர் இன்று (08) தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4