எரிவாயு விபத்துக்கள் எப்போது முடிவுக்கு வரும்?

#Laugfs gas #Litro Gas
Prathees
4 years ago
எரிவாயு விபத்துக்கள் எப்போது முடிவுக்கு வரும்?

தரமற்ற எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெற நீதிமன்றம் உத்தரவிட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகும்இ பல பகுதிகளில் எரிவாயு தொடர்பான விபத்துக்கள் இன்னும் பதிவாகியுள்ளன.

இன்று (08) காலை நிட்டம்புவ, மல்வத்த பிரதேசத்தில் வீடொன்றில் எரிவாயு குழாய் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்குள்ள பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, அஹுங்கல்ல, பத்திராஜா பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்காக நேற்று தரநிலை எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

பண்டாரவளை, இமதுவ, காலி, ரிதிமாலியத்த, பதுளை மற்றும் அத்தலப்பிட்டிய பிரதேசங்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, எரிவாயு விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று (08) தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை ஆலோசித்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4