நாயாறு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள பாரிய வத்தை

Prasu
4 years ago
நாயாறு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள பாரிய வத்தை

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08) பாரிய வத்தை ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது.

சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாக காணப்படும் இந்த வத்தை செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுக்கியுள்ளது.

இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த வத்தை கரை ஒதுங்கியுள்ளதை கண்டு உரிய தரப்புகளுக்கு அறிவித்துள்ளனர். கரை ஒதுங்கியுள்ள வத்தையை கடற்படையினர் முதற் கட்டமாக பார்வையிட்டுள்ளதோடு பெருமளவான மக்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த வத்தை யாருடையது எங்கிருந்து வந்துள்ளது . விபத்துக்குள்ளாக்கியதா ? போன்ற கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4