ஸ்ரீ லங்கன் விமானங்களுக்கு எரிபொருள் இல்லை: சவுதியிடம் கடன் வாங்க தீர்மானம்

#SriLanka
Prathees
4 years ago
ஸ்ரீ லங்கன் விமானங்களுக்கு எரிபொருள் இல்லை: சவுதியிடம் கடன் வாங்க தீர்மானம்

ஶ்ரீலங்கான் விமான நிறுவனத்திற்கு எரிபொருள் வழங்குவதற்கு டொலர் கடன் கொடுப்பனவுக்காக சவுதி அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா மற்றும் விமான சேவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் அதன் எரிபொருள்  கொடுப்பனவுக்காக  சவுதி அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

குறுகிய கால அல்லது நீண்ட கால கடன் வசதியைப் பெறுவது தொடர்பாக கலந்துரையாடல்  நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெறக்கூடிய கடன் தொகை எ வ்வளவு என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை  என்று அவர் கூறினார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4