பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

#Mahinda Rajapaksa #China
Prathees
4 years ago
பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரை, அலரிமாளிகையில் இன்று (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கை மருத்துவ மாணவர்களை சீனாவுக்குத் திரும்பச் செல்வதற்கான தளவாடங்கள் குறித்து இரு முக்கியஸ்தர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும்  சுற்றுலா, முதலீடுகள்இ கோவிட்-19 நிவாரணம் மற்றும் தொற்றுநோய்க்கு பிந்தைய தயார்நிலை, தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

மேலும், இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வரும் சீனாவுக்கும் அதன் மக்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4