கோடரியுடன் கைது செய்யப்பட்ட 31 வயது பெண் கைது

#Arrest
Prathees
4 years ago
கோடரியுடன் கைது செய்யப்பட்ட 31 வயது பெண் கைது

மனைவியால் கோடரியால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (08) இரவு  குறித்த நபர் மனைவியால் தாக்குதலுக்குள்ளான நபர்  ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

குருவிட்டஇ கந்தலந்த பிரதேசத்தில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த 34 வயதுடைய குறித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் குடிபோதையில் தனது மனைவியை தினமும் தாக்குதவாகவும்இ அந்த சந்தர்ப்பங்களில் மனைவி மற்றும் குழந்தைகள் அயல் வீட்டில் தஞ்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவும் குடிபோதையில் கூரிய ஆயுதம் மற்றும் அமிலத்துடன் வீட்டுக்கு வந்த கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் 31 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4