அனைத்து மாணவர்களும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும்

Prabha Praneetha
4 years ago
அனைத்து மாணவர்களும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும்

அனைத்து மாணவர்களும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட்டால் கற்றல் நடவடிக்கைகள் இடையூறுகள் இன்றி தொடர முடியும் என அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைபோன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா அறிகுறி தென்பட்டால் அல்லது நோயாளியின் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் பெற்றோரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை பாடசாலைகளில் கொரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டால் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உபுல் ரோஹன தெரிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4