இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 10-01-2022
#Ponmozhigal
#Quotes
#today
Mugunthan Mugunthan
2 years ago
பொன்மொழி - 01 -
தலைப்பு:-இலவசம்
இலவசமாக ஏதாவது
மக்களுக்கு கொடுக்க
ஆசைப்பட்டால்....!
உணவு, கல்வி, மருத்துவம்
இவை மூன்றை மட்டும்
கொடுங்கள போது...!
பொன்மொழி - 02 -
தலைப்பு:-தரம் தன்மை
பழம் தின்னும் கிளியும்
பிணம் தின்னும் கழுகும்
பறவை இனம் தான்
ஆனால் தரம் வேறு தன்மை
வேறு அப்படி தான் சில
மனிதர்களும்.....!
பொன்மொழி - 03 -
தலைப்பு:-தன்னம்பிக்கை
முடியாது என்று சொல்வது
மூட நம்பிக்கை
முடியுமா என்று கேட்பது
அவநம்பிக்கை
முடியும் என்று சொல்வதே
தன்னம்பிக்கை!
பொன்மொழி - 04 -
தலைப்பு:-பழிவாங்குதல்
பழிவாங்கும் குணம் என்பது
உறையிலிருந்து உருவப்பட்ட கத்தி....
அது ஒரு போதும் உன்மை பாதுகாக்கவோ
உனக்கு துணையாகவோ நிற்காது....!
பொன்மொழி - 05 -
தலைப்பு:-மௌனம்
எதையும் யோசிக்காமல்
சில நேரங்களில்
கோபப்படுவது
உரிமையின் வெளிப்பாடு.
எல்லாமே யோசித்து
எதுவுமே பேசாமல்
மௌனமாய் இருப்பது
உறவு நிலைக்க வேண்டும்
என்ற நிலைப்பாடு.