தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -24

#history #Article #Tamil People
தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -24

நேற்றைய தொடர்ச்சி...

புறநானூறு - சங்க இலக்கியங்கள்

புறப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்க்கை 160. இந் நூலுக்குப் பழைய உரை உள்ளது. அவ்வை துரைசாமிப் பிள்ளை விளக்க உரை வரைந்துள்ளார்.

பரிபாடல்

பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கு பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.

பத்துப்பாட்டு நூல்கள்

திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார். இவரது இயற்பெயர் கீரன் என்பதாம். நெடுநல்வாடையை இயற்றியவரும் இவரே. இந்நூல் ஆற்றுப்படுத்தப்படுவர்கள் பெயரைச் சார்ந்து வழங்காமல் பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார்ந்து விளங்குகிறது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான். இந் நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

தொடரும்....

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 23

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 22

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 21

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -20

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 19.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 18

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 17

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 16

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 15

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 14.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 13.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 12.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 11.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 10.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 09.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 08.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 07.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 06.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 05.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 04.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 03.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 02.

தமிழர் வரலாறும் தொன்மையும்பாகம் - 01.