இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 12-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 12-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அன்பு

பேராசை முடிகின்ற இடத்தில்
மகிழ்ச்சி தொடங்குகிறது.
புன்னகை தொடங்கும் இடத்தில்
வாழ்க்கை தொடர்கிறது.
அன்பு இருக்கும் இடத்தில்
அனைத்தும் கிடைக்கிறது.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-காகிதம்

யாரையும் தெருவில்
கிடக்கும் காகிதமாக
நினைத்துவிடாதே!
நாளை
அது பட்டமாகப் பறந்தால்
நீயும் சற்று நிமிர்ந்து தான்
பார்க்க வேண்டும்...!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வாழ்க்கை

வாழ்க்கை என்பது வளையம்
போன்றது. தொடக்கமும் முடிவும்
தெரியாத ஒன்று
இன்பமும் துன்பமும் இணைந்ததே
வாழ்க்கை என்பதை புரிந்து
கொண்டாலே மகிழ்ச்சி தான்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-திருந்துதல்

வெற்றியும் தோல்வியும்
இரு படிகளே..
ஒன்றில் உன்னை
உணர்ந்து கொள்வாய்..
மற்றொன்றில் உன்னை
திருத்திக்கொள்வாய்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தைரியம்

மனது குழப்பத்தில் இருக்கும் போது
மௌனமாக இருங்கள்..
மனது கஷ்டமாக இருக்கும் போது
தைரியமாக இருங்கள்.

மேலும் பல பொன்மொழிகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4