13.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
13.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: பணத்தேவை ஒன்று நிறைவேறும். நிதி வளம் சிறக்கும்.
பரணி: ஊதிய உயர்வு கிடைக்கலாம். அரசு வகையில் உதவி கிடைக்கும்.
கார்த்திகை 1: நீண்ட நாளாக இருந்த மனக்குழப்பம் தீரும். யோகமான நாள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியூட்டும் செய்தி வரலாம்.
ரோகிணி: தாமதமாகிய நன்மை தேடி வரும். கடமையில் கவனம் குவியும்.
மிருகசீரிடம் 1,2: மகன், மகளின் வாழ்க்கைத்தரம் உயரும். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: உங்களது முயற்சி வெல்லும். கலைத்துறையில் ஆர்வம் வரும்.
திருவாதிரை: கலைத்துறையினர் தங்கு தடையின்றி புதிய வாய்ப்பை பெறலாம்.
புனர்பூசம் 1,2,3: சாதுர்யமாக செயல்பட்டு பிறரிடம் பாராட்டு பெறுவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: நல்ல பெயரை எடுப்பதற்கு உண்டான செயல்களை செய்வீர்கள்.
பூசம்: எதிர்பார்த்த பயண வாய்ப்பு வரும். மதிப்புக்குரியோர் உங்களை பாராட்டுவர்.
ஆயில்யம்: வீண் கோபம் வேண்டாம். குடும்பத்தில் கலகலப்பு கூடும்.

சிம்மம்: 
மகம்: உடல் ஆரோக்கியம் சீராகும். வீடு வாங்கும் முயற்சி வெற்றிதரும்.
பூரம்: தாய்வழி உறவினரின் ஆதரவு உண்டு. சுபநிகழ்ச்சி ஒன்று கைகூடும்.
உத்திரம் 1: பணியிடத்தில் உங்களுக்கு தேவையான உதவி, ஆதரவு கிடைக்கும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: எந்தவொரு விஷயத்திலும் கூடுதலான கவனம் தேவை.
அஸ்தம்: பணியில் அலட்சியமாக இருக்க வேண்டாம். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
சித்திரை 1,2: நீங்கள் முயற்சித்த விஷயம் தாமதமான வெற்றியை தரும்.

துலாம்: 
சித்திரை 3,4: கோபத்தில் வரும் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
சுவாதி: நன்மை நடக்கவில்லையே என்ற ஆதங்கம் விரைவில் தீரும்.
விசாகம் 1,2,3: குழந்தைகள் பற்றிய கவலை வேண்டாம். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: மாறுபட்ட அனுபவம் ஏற்படும் நாள். புதிய வேலை கிடைக்கும்.
அனுஷம்: பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவி எளிதில் கிடைக்கும்.
கேட்டை: உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு: 
மூலம்: உங்களது பேச்சில் கவர்ச்சி அம்சம் கூடும். சோம்பலைத் தவிருங்கள்.
பூராடம்: வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
உத்திராடம் 1: அரசியல்வாதிகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குடும்பத்தினரின் கோபத்தைத் தீர்க்க வழி செய்வீர்கள்.
திருவோணம்: பல நன்மைகள் கிடைத்தாலும் விழிப்புடன் செயல்படுங்கள்.
அவிட்டம் 1,2: என்றோ செய்த கருணைச் செயல் இன்று நன்மை தரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: இழுபறியாக இருந்த விஷயங்கள் இன்று நடந்து முடியும்.
சதயம்: மிகுந்த முயற்சியாலும் உழைப்பாலும் உங்களின் கையிருப்பு கூடும்
பூரட்டாதி 1,2,3: என்றோ உழைத்ததன் பலனாக இன்று திடீர் அதிர்ஷ்டம் வரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: அவசரப் பேச்சினால் யாரையும் புண்படுத்த வேண்டாம்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் ஒருவருக்கு திடீர்ப்பயணம் ஒன்று ஏற்பாடாகும்.
ரேவதி: பரபரப்பாக சில செயல்களை செய்து முடிப்பீர்கள். சுபச்செலவு வரும்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்