இன்றைய போகி பண்டிகையில் இதை செய்ய மறவாதீர்கள்.

#spiritual #Pongal #today
இன்றைய போகி பண்டிகையில் இதை செய்ய மறவாதீர்கள்.

ஒவ்வொரு போகி பண்டிகையின் பொழுது நம் வீட்டில் இருக்கும் தேவையற்ற குப்பைகளை வெளியில் அகற்றுவது உண்டு. வருடம் முழுவதும் வீட்டை சுத்தம் செய்யாவிட்டால் கூட, அன்று ஒரு நாள் முழுவதும் இழுத்துப் போட்டு வீடு முழுவதையும் சுத்தம் செய்து கொண்டிருப்போம். இப்படி சுத்தம் செய்யும் பொழுது எந்த பொருட்களை மறக்காமல் எரித்து விடலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பல நூறு வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் தை மாதம் தான் முதல் மாதமாக இருந்துள்ளது. எனவே ஆண்டின் துவக்கத்தை ஒட்டி வீடு முழுவதையும் சுத்தம் செய்து, வெள்ளையடித்து, வீட்டில் இருக்கும் திருஷ்டிகளைக் கழித்து புத்தாண்டை புத்துணர்ச்சியுடன் வரவேற்பார்கள். இதற்காக வீட்டை சுத்தம் செய்த பின்பு காப்பு கட்டுவது வழக்கமாக வைத்துள்ளனர்.

காப்பு என்பது ஆவாரம்பூ, தும்பை இலை, சிறுபீளை, கருந்துளசி, வேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொரு கொத்தாக எடுத்து சேர்த்து கட்டி வீட்டின் நிலை வாசலில் தொங்க விடுவது ஆகும். இதில் இருக்கும் மூலிகை சக்திகள் வீட்டில் இருக்கும் துஷ்ட தேவதைகளை வெளியில் விரட்டியடிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. மேலும் அம்மாதத்தில் ஏற்படக்கூடிய நோய் தாக்குதல்களில் இருந்து காக்கும் அரணாகவும் இவ்வாறு செய்து வந்தனர்.

போகி பண்டிகையின் பொழுது கண்டிப்பாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். எழுந்ததும் வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை போட்டு எரித்து விட வேண்டும். இதற்காக முந்தைய நாளே தேவையில்லாத பொருட்களை தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். முதலாவதாக ஆண்டின் இறுதியாக நம்மிடம் இருக்கும் கேலண்டர் அட்டைகளை தீயிலிட்டு கொளுத்தலாம். பழைய கசப்பான நினைவுகளை மறந்து புதியதொரு அத்தியாயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த காலண்டர் அட்டையை எரிக்கலாம்.

பழைய துணிமணிகளை தா,ன தர்மம் செய்வதாக இருந்தால் அவை கட்டாயம் கிழியாத நல்ல துணிமணிகளாக இருக்க வேண்டும். கிழிந்த துணி மணிகளை தான, தர்மங்கள் செய்தால் பாவம் தான் வந்து சேரும். அதே போல இந்த துணிமணிகளை வீட்டில் வைத்து இருந்தாலும் தரித்திரம் வந்து சேரும். எனவே இந்த பழைய துணிமணிகளை போகியில் போட்டு கட்டாயம் எரிப்பது நல்ல விஷயமாகும். வீட்டை சுத்தம் செய்ய உதவக்கூடிய வகையிலாக இருக்கும் பொருட்களை போட்டு எரிக்கலாம். துடைப்பம், மாப், உடைந்த ஒட்டடை குச்சி போன்றவற்றில் பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை போட்டு போகியில் எரிப்பது நலமாகும். கடைசியாக சுத்தம் செய்து விட்டு புதிதாக இவற்றை வாங்கி வைப்பது அதிர்ஷ்டம் பெருக செய்யும்

வெளியில் சென்று வந்தவுடன் முதலில் நம் கால்களை சுத்தம் செய்ய துடைப்பதற்கு கால் மிதியை பயன்படுத்துவது வழக்கம். இந்த கால் மிதியடியை ஒரு சிலர் அவ்வபோது அலசி பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலானோர் அதனை அசுத்தமாக அப்படியே வைத்திருப்பார்கள். கிழிந்த நிலையில் அல்லது அசுத்தமான நிலையில் இருக்கும் இந்த மிதியடிகளை போகியில் போட்டு எரிப்பது நல்ல விஷயமாகும்.

போகியில் போட்டு எரிப்பதற்கு சரியான பொருளாக நம் வீட்டில் நாம் சமையலறையில் பயன்படுத்தும் கரித்துணி நிச்சயம் இருக்கும். சூடான சமையல் பாத்திரங்களை இறக்குவதற்கும், சமையலறையை சுத்தம் செய்வதற்கும் பயன்படும் இந்த கரித்துணியை போட்டு எரித்து புதிதாக ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நம்மிடம் கிழிந்த மற்றும் அசுத்தம் நிறைந்துள்ள தேவையற்ற பொருட்களை இந்த போகியில் போட்டு எரித்து உங்கள் வீட்டை மேலும் சுத்தமாக்கி தை மாதத்தை இனிதே வரவேற்கலாம்.

மேலும் ஆன்மீக தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!