பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு பாய்..

Prabha Praneetha
4 years ago
பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு பாய்..

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது 106 நாட்களை கடந்து இன்றுடன் நிறைவடையவுள்ளது.

எனவே இன்று 6 மணிக்கு துவங்க உள்ள கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

ஆனால் இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து இணையத்தில் இந்த சீசனில் வெற்றியாளர் யார்  என்பது லீக்காகி உள்ளது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் முதலிடத்தை இந்த சீசனின் என்டர்டைன்னரான ராஜு மக்கள் அளித்த அதிக வாக்கின் அடிப்படையில் பெற்றுள்ளார்.

இந்த சீசன் துவங்கப்பட்ட நாளிலிருந்தே ராஜு அல்லது பிரியங்கா இருவரும் ஒருவர்தான் இந்த சீசனின் வெற்றியாளராக இருக்கவேண்டும் என பிக்பாஸ் ரசிகர்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டனர்.

எனவே அவர்கள் நினைத்தால் போலவே முதலிடம் ராஜுவிற்கும், இரண்டாம் இடம் பிரியங்காவிற்கும் கிடைத்துவிட்டது.

இவர்களைத் தொடர்ந்து பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர். தற்போது ராஜு பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு அளிக்கப்படும் ட்ராபியுடன் செல்பி எடுத்துள்ளார் புகைப்பட தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் பிக்பாஸ் தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4