போதைப்பொருள் சோதனையில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் கைது

Prathees
4 years ago
 போதைப்பொருள் சோதனையில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் கைது

பல பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையின் போது பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார், கிராண்ட்பாஸ் மற்றும் பாணந்துறை பகுதிகளில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார், தானாபுரம் சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 05 கிராம் ஹெரோயினுடன் கிராண்ட்பாஸ், வடுல்லாவத்த பிரதேசத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை இரத்துவத்த பிரதேசத்தில் 105 கிராம் ஹெரோயினுடன் 44 வயதுடைய பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4