பல வங்கிகளை உடைத்த கொள்ளையன் பொலிஸாரிடம் சிக்கியது எப்படி?

#Arrest
Prathees
2 years ago
பல வங்கிகளை உடைத்த கொள்ளையன் பொலிஸாரிடம் சிக்கியது எப்படி?

ரத்மலானை விமான நிலையத்திற்கு அருகில் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை கல்கிசை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​பத்தேகமவில் உள்ள சனச வங்கியை உடைத்து 954,094 ரூபா பணத்தை திருடியமை,  பிடிகல மத்தக்க சமுர்த்தி வங்கியை உடைத்து 30,000 ரூபா திருட்டு, எல்பிட்டிய எத்கந்துர சனச வங்கியில் கொள்ளை மற்றும்  தெலிக்கடை கரதேவல கிராமிய வங்கியை உடைத்து 4,85,000 ரூபா பணத்தையும், 900,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் திருடிச் சென்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீவடும, பத்தேகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கு காலி நீதவான் நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நேற்று (16) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்