இலங்கைக்கு சீனாவில் இருந்து நன்கொடையாக அரிசி!

#SriLanka
Nila
4 years ago
இலங்கைக்கு சீனாவில் இருந்து நன்கொடையாக அரிசி!

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரசி, நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

1952 ஆம் ஆண்டு இலங்கை – சீன இறப்பர், அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக வர்த்தக அமைச்சர், சீனத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரியுடன் அண்மையில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது என்றும் பேச்சாளர் கூறினார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4