தரம் குறைந்த எரிபொருளை இறக்குமதி செய்தால் என்ன நடக்கும்?

Prabha Praneetha
4 years ago
தரம் குறைந்த எரிபொருளை இறக்குமதி செய்தால் என்ன நடக்கும்?

தரம் குறைந்த பெற்றோலை இறக்குமதி செய்யக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) தெரிவித்துள்ளார்.

நட்பு நாடுகளிடமிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும், இவ்வாறு எரிபொருட்களை இறக்குமதி செய்யும்போது அதன் தரம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், உரிய தரத்தில் இல்லாத பெற்றோல் டீசலினால் வாகனங்கள் மற்றும் ஏனைய இயந்திர சாதனங்களுக்கு நீண்ட கால பிரச்சினைகள் ஏற்படக் கூடும் எனவும்  இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4