புதிய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? 

Prathees
4 years ago
புதிய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? 

மீரிகம முதல் குருநாகல் வரையிலான அதிவேக நெடுஞ்சாலையில் முதல் 12 மணித்தியாலங்களில் 2.8 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு – கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் நேற்று முன்தினம் ற்பகல் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நெடுஞ்சாலை  நகர்ப்புறங்களைத் தவிர்த்து, முக்கியமாக காலி நிலங்கள் வழியாகச் செல்லும். 4 வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் பணம் செலுத்தும் கவுன்டர்களுடன் ஐந்து பரிமாற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4