ஆண்டவர் கூட்டணியில் இணையும் சிவகார்த்திகேயன்..

Prabha Praneetha
2 years ago
ஆண்டவர் கூட்டணியில் இணையும் சிவகார்த்திகேயன்..

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 இன்று இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் விக்ரம் படத்தில் கமலஹாசன் நடித்து வருகிறார். உலகநாயகன் தனது 100வது படமான ராஜபார்வை படத்தில் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

கமல் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் என பெயரிட்டு இருந்தார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வந்தார். கடைசியாக கமலின் இளைய மகள் அக்சரா ஹாசன் நடித்த கடாரம் கொண்டான் படத்தை தயாரித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கமலஹாசன் தன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார்.

அதில் சில வேலைகள் சந்தோசத்தை தரும். சில கவுரவத்தையும், பெருமையையும் தரும். சோனி பிலிம்ஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் அனைவருக்குமே பெருமை தேடித் தரும்.

தம்பி சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி என கமலஹாசன் கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சோனி ஃபிலிம் நிறுவனம் மற்றும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறது. பெயரிடாத இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இது குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம்.

சினிமாவின் இரு மாபெரும் சக்திகளான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சோனி பிலிம்ஸ் உடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் அத்துடன் நண்பர் ராஜ்குமார் பெரியசாமி உடன் பணியாற்றுவது பாக்கியம் என கூறியுள்ளார்.

இதனால் விஜய் டிவியில் இன்று நடக்கும் பிக் பாஸ் கிராண்ட் பினாலேவில் சிறப்பு விருந்தினராக
விஜய் டிவியின் செல்லப் பிள்ளை சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் முக்கிய அறிவிப்பை இந்நிகழ்ச்சியில் கமலஹாசன் வெளியிட வாய்ப்பு உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!