தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

Prabha Praneetha
4 years ago
தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் தமிழ் நடிகராக கடந்த வருடம் அசுரன் படத்துக்காக தேசிய விருது பெற்றார்.

கடைசியாக அக்‌ஷய் குமாருடன் இணைந்து இந்தியில் அத்ராங்கி ரே (தமிழில் கலாட்டா கல்யாணம்) படத்தில் நடித்திருந்த தனுஷ் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆஃப் பகீர் படம் ஏற்கனவே தனுஷ் நடித்து வெளியான திரைப்படம்.

இதனைத் தொடர்ந்து தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடித்துவருகிறார். தவிர தமிழில் மாறன், திருச்சிற்றபலம் உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யா, இயக்குநராக மூன்று திரைப்படத்தில் தனுஷை இயக்கியிருந்தார். இதனை அடுத்து வை ராஜா வை படத்தை இயக்கியிருந்தார்.

இப்படி, இதுவரை 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதியர் திடீரென மனமொத்து பிரிவதாக அறிவித்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிக்கையை இருவருமே பதிவிட்டுள்ளனர்.

மிக அண்மையில்

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள இந்த பிரிவு தேவைப்படுவதாக குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Dhanush Aishwaryaa separation after 18 years husband and wife

இந்த திடீர் பிர்வுக்கு என்ன காரணம் என ரசிகர்கள் ஒருபுறம் அதிர்ச்சியாக பேசி வருவதுடன், இவர்களின் வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு பாசிடிவ் வார்த்தைகளையும் கூறி வருகின்றனர்.

தான் இவர்கள் இருவரும் கோயிலுக்கு சென்று மாலையும் கழுத்துமாக நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

மேலும் சினிமா செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4