இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை ! வெளியான தகவல்

#SriLanka #Corona Virus #Covid 19
Nila
4 years ago
இலங்கையில்  கொரோனா நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை ! வெளியான தகவல்

கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 சத்திர சிகிச்சை கட்டில்களில், 52 கட்டில்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கொவிட் தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி, பிராணவாயு தேவையுடைய கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிப்பைக் காட்டுகிறது.

எனவே, பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கொவிட்-19 தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்


மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4