ஒரே ஒரு ஐட்டம் பாடலை வைத்து பாலிவுட்டில் கமிட்டான சமந்தா..

Prabha Praneetha
4 years ago
ஒரே ஒரு ஐட்டம் பாடலை வைத்து பாலிவுட்டில் கமிட்டான சமந்தா..

இன்றைய சூழலில் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகள் என்றால் அது நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவர் மட்டுமே. தற்போது இவர்களுக்கு தான் தென்னிந்திய சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. அதிலும் சமந்தா விவாகரத்திற்கு பின்னர் முழு நேரமாக படங்களில் கவனம் செலுத்தி வருவதால் அடுத்தடுத்து கதை கேட்டு வருகிறாராம்.

தற்போது தமிழில் காத்து வாக்­குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, தெலுங்­கில் குண­சே­க­ரன் இயக்­கத்­தில் சாகுந்­த­லம், ஹரி சங்­கர், ஹரீஷ் நாரா­ய­ணன் இயக்­கத்­தில் யசோதா ஆகிய படங்­களை கைவ­சம் வைத்துள்ளார். இந்நிலையில் சமந்தா அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் நடிக்க உள்ளாராம். அதுவும் ஒரே சமயத்தில் மூன்று படங்களில்.

ஆம் முன்னதாக சமந்தா நடிப்பில் வெளியான பேமிலி மேன் வெப் தொடருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த தொடருக்கு வரவேற்பு அளித்தனர். அதன்மூலம் சமந்தாவிற்கு அடுத்தடுத்து பாலிவுட் வாய்ப்புகள் வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி ஹிந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சமந்தாவை அணுகியுள்ளதாம். அதுவும் ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதமும் பெற்று விட்டதாக கூறப்படுகிறது. சமந்தாவும் இதற்கு சம்மதித்து விட்டதால் அந்நிறுவனம் அவருக்கு மிகப்பெரிய தொகை ஒன்றாக முன்பணமாக வழங்கியுள்ளதாகவும கூறப்படுகிறது.

தெலுங்கு படத்திலேயே சமந்தா பயங்கர கவர்ச்சி காட்டுவார். இதுல ஹிந்தினா சொல்லவா வேண்டும். இனிமே சமந்தா காட்டுல அடைமழை தான். ஊ சொல்றியா மாமா பாட்டோட ஹிட்டு தான் இந்த பாலிவுட் வாய்ப்பு கிடைக்க காரணமாக இருக்கும் என சிலர் கூறி வருகிறார்கள். எது எப்படியோ சீக்கிரமே சம்முவ ஹிந்தி சினிமால பார்க்கலாம்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4