பிரிட்டன் மகாராணி அரண்மனையில் 26 அன்னப்பறவைகள் கருணை கொலை

Keerthi
4 years ago
பிரிட்டன் மகாராணி அரண்மனையில் 26 அன்னப்பறவைகள் கருணை கொலை

பிரிட்டன் மகாராணி அரண்மனையில் 26 அன்னப்பறவைகள் கருணை கொலை செய்யப்பட்டிருப்பது மகாராணிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், செல்லப்பிராணிகள் மீது அதீத அன்பு கொண்டவர். ஆனால், தற்போது அவர் தொடர்ச்சியாக தன் செல்லப்பிராணிகளை இழந்து வருகிறார். கடந்த வருடத்தில் அவரின் இரண்டு செல்ல நாய் குட்டிகள் இறந்தது. இந்நிலையில், அவரின் 26 அன்ன பறவைகளை கருணைக் கொலை செய்துள்ளனர்.

இதனால், மகாராணி அதிக வேதனையடைந்திருக்கிறார். மகாராணியின் அன்னப்பறவைகளில் ஆறு பறவைகள் பறவை காய்ச்சலால் பலியானது. நேற்றும் ஒரு அன்னப்பறவை பலியானது. எனவே, இதனால் மேலும் பறவை காய்ச்சல் உண்டாகக்கூடும் என்ற பயத்தில் 26 பறவைகளை கால்நடை மருத்துவர்கள் கருணைக் கொலை செய்தனர். இதனால் மொத்தமாக 33 பறவைகளை இழந்து மகாராணியார், வருத்தமடைந்திருக்கிறார்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4