மின்சார பொறியியலாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று

Prathees
4 years ago
மின்சார பொறியியலாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (19) அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இன்று இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபையினால்  சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  அதன் செயற்குழு உறுப்பினர் சரித ஜயநாத் தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (18) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளரின் நியமனத்தை இரத்து செய்யாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரித ஜயநாத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4