இலங்கையில் தனிநபர் மீது திணிக்கப்பட்டுள்ள கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில்  தனிநபர்  மீது திணிக்கப்பட்டுள்ள கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

நாட்டின் தற்போதைய நிலையில் தனிநபர் கடன் 8 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. எந்த பக்கம் நோக்கினாலும் வீழ்ச்சியே காணப்படுகிறது.

எமது வெளிநாட்டுக் கடன்களின் அளவு 17 ஆயிரத்து 200 பில்லியனாக காணப்படுகிறது.

இதற்கமைய தனி நபர் ஒருவரின் மீது 8 இலட்சம் ரூபா அளவிலான கடன் சுமை காணப்படுகிறது.

1970 காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை பொறுப்பேற்கும் போது டொலரின் பெறுமதி 9 ரூபாவாக காணப்பட்டது.

அவர் நாட்டை வழங்கும் போது டொலரின் பெறுமதி 7 ரூபாவாக இருந்தது.

அதன் பின்னர் நாட்டை பொறுப்பேற்ற அனைத்து தலைவர்களும் இந்த கடன் சுமையைக் குறைப்பதில் தோல்வியடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4