பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு கொரோனா தொற்று உறுதி.!

Keerthi
4 years ago
பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு கொரோனா தொற்று உறுதி.!

தனியார் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் அஞ்சனா மிகவும் பிரபலமடைந்தவர்.

இவர் கயல் படத்தில் நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. மகன் பிறந்த பின்னர், சிறிது காலம் நடிப்புக்கு டாட்டா காட்டிய அஞ்சனா. தற்போது, மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த அந்த அஞ்சனாவும், அவருடைய கணவர் சந்திரனும் இணையதளத்தில் வீடியோக்கள் போட்டோ ஷூட் என்று வெளியிட்டு அரட்டை அடித்து பொழுதைக் கழித்து வந்தனர்.

VJஅஞ்சனாவும் அவருடைய கணவர் சந்திரனும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருவது வழக்கம். சமீப காலமாகவே உடைகளில் மாற்றத்துடன் அஞ்சனா போட்டோ வெளியிட்டு தன்னை தானே ரொமான்டிக்காக கொஞ்சி இணையவாசிகளை கிறங்க வைப்பார்.

இந்த நிலையில், அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் அவரது ரசிகர்கள் உடனடியாக தனிமைப் படுத்திக் கொண்டு ஓய்வு எடுங்கள் சரியாகிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சினிமா செய்திகளை படிக்க இங்கே அழுத்தவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4