மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி

Prabha Praneetha
4 years ago
மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி

மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்திருந்த நிலையில்,மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில், பொது மக்கள் பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை அதிகளவாகக் கொள்வனவு செய்த காரணத்தினால் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையக பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அந்த பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டமையினால் கடந்த சில மாதமாக மரக்கறிகளின் விலை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4